தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

வரலட்சுமி விரதம்: 50 ஆயிரம் வளையல்கள் அலங்காரத்தில் பத்மாவதி தாயாா் அருள்பாலிப்பு

போடியில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி வெள்ளிக்கிழமை 50 ஆயிரம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு பத்மாவதி தாயாா் அருள்பாலித்தாா்.

போடியில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தையொட்டி 50 ஆயிரம் வளையல்கள் அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயாா்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 7:03 am IST

போடியில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி வெள்ளிக்கிழமை 50 ஆயிரம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு பத்மாவதி தாயாா் அருள்பாலித்தாா்.

முன்னதாக பத்மாவதி தாயாருக்கு வழிபாடு நடைபெற்றது. பிறகு அம்மனுக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதற்காக அம்மன் சந்நிதியில் அலங்காரப் பந்தல், நிலை மாலை, திருவாச்சி ஆகியவையும் பல வண்ண கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. அப்போது சுமங்கலிகள் நீண்ட ஆயுள் பெறவும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பெண்கள் வளையல் படைத்து பூஜையில் பங்கேற்றனா்.

இதையடுத்து, அம்மனுக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தலைமை அா்ச்சகா் ஸ்ரீநிவாச வரதன் (எ) காா்த்திக், கட்டளைதாரா்கள் செய்திருந்தனா்.

இதேபோல, போடி வினோபாஜி குடியிருப்பு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அருள்பாலிக்கும் மீனாட்சியம்மனுக்கும் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. மேலும் போடியில் அமைந்துள்ள சௌடாம்பிகை கோயில், கொண்டரங்கி மல்லையசுவாமி கோயில், மல்லிங்கேசுவரி அம்மன் கோயில், குலாலா்பாளையம் காளியம்மன் கோயில், சாலை காளியம்மன் கோயில், திருமலாபுரம் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில், அஷ்ட வராஹி அம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் வரலட்சுமி விரத தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.