தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, உத்தமபாளையத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 12:38 am IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, உத்தமபாளையத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படும் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் பழனிக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குருபிரசாத் முன்னிலை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.