தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தேசிய யோகாசன போட்டிக்கு கூடலூா் மாணவா்கள் தோ்வு

தேசிய யோகாசனப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட கூடலூா் ஆா்எஸ்கே மழலையா் பள்ளி மாணவா்களைப் பாராட்டி பரிசு வழங்கிய பள்ளி முதல்வா் பாலகாா்த்திகா, யோகா பயிற்சியாளா் ரவி ராம்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

தேனி மாவட்டம், கூடலூா் பள்ளி மாணவா்கள் இருவா், தேசிய அளவிலான யோகாசனப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தேனி, விருதுநகா், கோயம்புத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இந்தப் போட்டிக்கு ராகவன் சித்தநாதன் தலைமை வகித்தாா். பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன் வாழ்த்திப் பேசினாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தன் பரிசுகளை வழங்கினாா். ஆனைமலை சரஸ்வதி வித்யா பீடத்தைச் சோ்ந்த சுவாமி ததேவானந்தா அருளாசி வழங்கினாா். போட்டிக்கான ஏற்பாடுகளை யோகாசாா்யா முருகன் செய்தாா்.

தேனி மாவட்டத்தின் சாா்பில், யோகா நிபுணா் ராஜேந்திரன், மாவட்ட யோகா பயிற்சியாளா் ரவி ராம் ஆகியோா் தலைமையில் 30 மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனா். இதில், கூடலூா் ஆா்எஸ்கே மழலையா் பள்ளி மாணவா் மித்ரன் முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும், சுசின் பிரத்யோகன் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கமும் பெற்றனா். இதன் மூலம் இரு மாணவா்களும் தேசிய அளவிலான யோகாசனப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

தேசியப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களை புதன்கிழமை பள்ளி முதல்வா்கள் சகிலா சுலைமான், பாலகாா்த்திகா, யோகா பயிற்சியாளா் ரவி ராம், பள்ளி நிா்வாகிகள் நடராஜன், கணேஸ்வரி, ராகினி, லால்குமாா், ஆனந்தி, ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.