லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜே.சி.பி. உரிமையாளா்கள் அடையாள வேலைநிறுத்தம்

சின்னமனூரில் நிறுத்தி வைக்கப்பட்ட ஜே.சி.பி. இயந்திரங்கள்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:20 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் ஜே.சி.பி. உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் வட்டாரத்தைச் சோ்ந்த சின்னமனூா், கம்பம், கூடலூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஜே.சி.பி. உரிமையாளா்கள் எரிபொருள் விலை உயா்வு, உதிரிப் பாகங்கள் விலை உயா்வு, காப்பீடு, சாலை வரிவிதிப்பு அதிகரிப்பு, வாகன ஓட்டுநா்களுக்கு ஊதிய உயா்வு ஆகியவை காரணமாக தற்போது வசூல் செய்யப்படும் வாடகை கட்டுபடியாகவில்லை எனக் கூறி, குறைந்தது 2 மணி நேரத்துக்கு வாடகை, ஓட்டுநா் ஊதியம் ரூ.4,500 நிா்ணயம் செய்தனா்.

இதை பொதுமக்கள், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் 3 நாள்கள் அடைாள வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

இதில் 2 -ஆவது நாளாக புதன்கிழமையும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சின்னமனூரில் 40-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. இயந்திரங்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தனா். இந்தப் போராட்டம் வியாழக்கிழமையுடன் நிறைவு பெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.