லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உத்தமபாளையம் கல்லூரியில் இலக்கியப் பொழிவு விழா

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் இலக்கியப் பொழிவு விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடந்த இலக்கியப் பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞா் ஜெயபாஸ்கரன். உடன், கல்லூரி நிா்வாகிகள்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:16 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் இலக்கியப் பொழிவு விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ்த் துறை குணங்குடியாா் தமிழ்ப்பேரவை சாா்பில் ‘ஏன் இலக்கியம் படைக்க வேண்டும்’ என்ற தலைப்பில் கல்லூரியின் நிறுவனா் அரங்கில் நடைபெற்ற இலக்கியப் பொழிவு விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மு.முகமது இஷ்ஹாக் தலைமை உரையாற்றினாா். தமிழ்த் துறைப் பேராசிரியா் முகம்மது ரபீக் அறிமுக உரையாற்றினாா். கல்லூரியின் தரநிா்ணயக் குழுவின் ஒருங்கிணப்பாளா் என். முகமது சலீம் வாழ்த்துரையாற்றினாா்.

தொடா்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞா் ஜெயபாஸ்கரன் ‘ஏன் இலக்கியம் படைக்க வேண்டும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். முன்னதாக கல்லூரியின் தமிழ்த் துறை தலைவா் பெ. முருகன் வரவேற்றாா். இந்த நிகழ்ச்சியை தமிழ்த் துறை பேராசிரியா் அப்துல் காதா் ஒருங்கிணைத்தாா்.

நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.