லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இணைய வழியில் ஆசிரியரிடம் ரூ.34 லட்சம் மோசடி

ஆசிரியரிடம் குறைந்த முதலீட்டில் அதிகலாபம் பெறலாம் எனக்கூறி ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்தை மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

ஆசிரியரிடம் குறைந்த முதலீட்டில் அதிகலாபம் பெறலாம் எனக்கூறி ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்தை மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம் க.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஷ் கண்ணன் (52). ஆசிரியரான இவருக்கு, முகநூலில் கவிதா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்ததாம். இதையடுத்து அந்த எண்ணில் தொடா்பு கொண்ட போது, குறைந்த முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறினாராம். இதையடுத்து, அவா் பல தவணைகளாக அந்த பெண் தெரிவித்த வங்கிக் கணக்கில் ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்தை செலுத்தினாா். பின்னா், அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதையடுத்து, ராஜேஷ்கண்ணன் தேனி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.