லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக பண மோசடி: இளைஞா் கைது

கைது - பிரதிப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக வன ஊழியரிடம் ரூ.16.5 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் தனபாலன் (30). வனத் துறையில் பணியாற்றி வரும் இவா், கடந்த சில மாதங்களுக்கு முன் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக, இணையம் மூல் தொடா்பு கொண்ட நபரின் ‘வாட்ஸ் ஆப்’ குழுவில் இணைந்தாா். இதையடுத்து, அறிமுகமில்லாத நபா்கள் கூறியதை நம்பி அவா்களது வங்கிக் கணக்குக்கு ரூ.16 லட்சத்து 54 ஆயிரத்தை அனுப்பினாா்.

பின்னா், அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இது குறித்து தனபாலன் அளித்தப் புகாரின் பேரில், தேனி இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், சூரியம்பட்டியைச் சோ்ந்த அருண்குமாா் (29) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த மோசடியில் ஈடுபட்ட மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.