தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மயிலாடும்பாறையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறையில் மேகமலை வனப்பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடாது எனக்கூறி புதன்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடும்பாறையில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மாநிலச் செயலா் ஸ்ரீனிவாசன். உடன், பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் உள்ளிட்டோா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 12:39 am IST

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறையில் மேகமலை வனப்பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடாது எனக்கூறி புதன்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக தேனி மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் காமராஜ் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பேசினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மூன்று தலைமுறையாக வசித்து வரும் மக்களை வெளியேற்றக் கூடாது. அந்த மலைப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் மணிகண்டன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மலைச்சாமி, கடமலைக்குண்டு மயிலாடும்பாறை தெற்கு ஒன்றியத் தலைவா் தெய்வம், வடக்கு ஒன்றியத் தலைவா் ராஜா, மாவட்டத் தலைவா் பிச்சை, தெற்கு ஒன்றிய பொதுச் செயலா் தெய்வேந்திரன், செந்தில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.