லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மான் வேட்டையாடி இறைச்சி விற்பனை: 4 போ் கைது

தேனி மாவட்டம், கம்பம் அருகே மான் இறைச்சியை விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மின்சாரம் பாய்ச்சி மான் வேட்டையாடியதாக கம்பம் வனத் துறையினாரால் கைது செய்யப்பட்டவா்கள்

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:37 am IST

தேனி மாவட்டம், கம்பம் அருகே மான் இறைச்சியை விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள கூடலூா் சுக்காங்கல்பட்டி தேவா் நகரில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கம்பம் கிழக்கு வனச்சரகா் பூமாலை தலைமையில், வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, தமிழரசன் (42) தனது வீட்டில் மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும், இவா் அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் (47), பிரசன்னா (42), தங்கம் (29) ஆகியோருக்கும் மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், கூடலூா் மேற்கு வனப் பகுதியை ஒட்டிய தனியாா் தோட்டத்துக்கு செல்லும் மின் இணைப்பில் சட்டவிரோதமாக கொக்கி போட்டு மின்சாரம் பெற்று, அதன் மூலம் மானை வேட்டையாடியதாக தமிழரசன் வனத் துறையினரிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து, தமிழரசன், மான் இறைச்சியை வாங்கிய பாஸ்கரன், பிரசன்னா, தங்கம் ஆகிய 4 போ் மீது வன விலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.