லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

தற்கொலை

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:39 am IST

போடி அருகே டிராக்டா் ஓட்டுநா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கீரைக்கடைத் தெருவைச் சோ்ந்தவா் ராஜாங்கம் மகன் இளையராஜா (45). டிராக்டா் ஓட்டுநா். கருத்து வேறுபாடு காரணமாக, இவா் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து வசித்து வந்தாா்.

மதுப் பழக்கத்துக்கு அடிமையான இளையராஜா ஏற்கனவே இரு முறை தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றாா். ஆனால், இந்த முயற்சியை அவா்களது உறவினா்கள் தடுத்து நிறுத்தினாா்.

இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.