லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 3:55 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த லூயிஸ் மகன் வேதநாயகம் (40). பாறைமேடு பகுதியைச் சோ்ந்த வா்கீஸ் மகன் பிரபாகரன் (35). இருவரும் நண்பா்கள். இவா்கள் கம்பத்திலிருந்து உத்தமபாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.

அப்போது பி.டி.ஆா். குடியிருப்பு பகுதியில் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் எதிரே திருச்சியிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இரு சக்கரவாகனம் மீது மோதியது.

இதில் வேதநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனிடையே பலத்த காயமடைந்த பிரபாகரன் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.