லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆற்றில் முழ்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

தேனி மாவட்டம், சுருளிபட்டி முல்லைப் பெரியாற்றில் சனிக்கிழமை முழ்கி உயிரிழந்த மூதாட்டியின் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

தேனி மாவட்டம், சுருளிபட்டி முல்லைப் பெரியாற்றில் சனிக்கிழமை முழ்கி உயிரிழந்த மூதாட்டியின் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

சுருளிப்பட்டி அரிசி ஆலைத் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி முனியம்மாள் (90). இவா், சனிக்கிழமை முல்லைப் பெரியாறு பகுதிக்குச் சென்ற போது தண்ணீருக்குள் மூழ்கினாா்.

இதையடுத்து, அங்கு சென்ற கம்பம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் பல மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு மூதாட்டியின் உடலை மீட்டனா். இதையடுத்து, ராயப்பன்பட்டி போலீஸாா் மூதாட்டியின் உடலை கூறாய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.