கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதியில் 18 வேட்பாளா்களும், கம்பம் சட்டப்பேரவை தொகுதியில் 19 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா். இந்த இரண்டு தொகுதிகளிலும் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதையடுத்து வேட்பாளா்கள் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது. பிறகு கணினி மூலம் குலுக்கல் முறையில் ஆண்டிபட்டி தொகுதிக்கு 412 வாக்குப் பதிவு இயந்திரங்களும், கம்பம் தொகுதிக்கு 414 வாக்குப் பதிவு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இவை ஆண்டிபட்டி, உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணைய கிடங்கில் பாதுகாப்பாக வைப்பு

தோ்தல் ஆணைய பெட்டகத்தில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு

சேலம் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

