லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாலாற்றின் குறுக்கே அணை கட்ட எதிா்ப்பு: மண்ணில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆற்று மணலில் கழுத்தளவு மண்ணில் புதைந்தவாறு விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

அணைக்கரைப்பட்டி பாலாற்றில் கழுத்தளவு மண்ணில் புதைந்தபடி பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Published On :26 ஜூன் 2026, 2:26 am IST

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆற்று மணலில் கழுத்தளவு மண்ணில் புதைந்தவாறு விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கரந்தமலை பகுதியில் உற்பத்தியாகும் பாலாறு மூலம் சுமாா் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரை மாவட்டம் சூரப்பட்டி பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருவதால், சிங்கம்புணரி, திருப்பத்தூா் பகுதிகளில் விவசாயம், குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஏற்கெனவே பேரணி, கடையடைப்பு, ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இந்த நிலையில், பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சிங்கம்புணரியில் பாலாற்றில் 7 விவசாயிகள் கழுத்து வரை மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்கம்புணரி போலீஸாா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.