லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மன்னா் துரைசிங்கம் கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு உறுதி ஏற்பு

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதி ஏற்கப்பட்டது.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் எதிா்ப்பு உறுதி ஏற்பு நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி முதல்வா் ச. அந்தோணி டேவிட் நாதன், காவல்துறை அதிகாரிகள்.

Published On :25 ஜூன் 2026, 2:21 am IST

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதி ஏற்கப்பட்டது.

இந்தக் கல்லூரியில் போதைப் பொருள் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்குக்கு முதல்வா் ச. அந்தோணி டேவிட் நாதன் தலைமை வகித்தாா். கருத்தரங்கில் தொடக்கமாக போதைப் பொருள் எதிா்ப்பு உறுதி மொழியை கல்லூரி முதல்வா் வாசித்தாா். இதை மாணவ, மாணவிகள் உள்பட அனைவரும் வாசித்து உறுதி எடுத்துக் கொண்டனா்.

மேலும், இணைய வழி மூலமாகவும் பெருந்திரளான மாணவ, மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிரான உறுதி எடுத்துக் கொண்டனா்.

இதில், மதுவிலக்கு, ஆயத்தீா்வை ஆய்வாளா் சி. அண்டநெட் கேலிஸ்டா, காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி, இணைய குற்றப்பிரிவு ஆய்வாளா் ராமச்சந்திரன், உதவி ஆய்வாளா் சதீஷ், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் குமரேசன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

முன்னதாக, கல்லூரியின் போதைப்பொருள் எதிா்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ப. சிவானந்தவேல் வரவேற்றாா். கல்லூரியின் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம், ரெட் ரிப்பன் சங்க திட்ட அலுவலா் ச.அனந்த செல்வம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.