லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசுப் பள்ளியில் சிறாா் திரைப்படம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.

கீழக்கோட்டை அரசுப் பள்ளியில் சிறாா் திரைப்படத்தை பாா்வையிட்ட மாணவ, மாணவிகள்.

Published On :25 ஜூன் 2026, 2:21 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவுப்படி, சிறாா் திரைப் படங்கள் மாதம்தோறும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருகின்றன. இதன்படி, கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘தி லிட்டில் பிரின்ஸஸ்’ என்ற சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டது.

நிகழ்வுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தாா். பள்ளியின் அறிவியல் ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவருமான ஆரோக்கியசாமி, சிறாா் திரைப்படங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். திரைப்படம் குறித்து மாணவா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கணித ஆசிரியை மீனாட்சி, ஆங்கில ஆசிரியை கீதா, ஆசிரியை வாசுகி, ஆசிரியா் ஜோசப், கணினி பயிற்றுநா் வித்யா ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.