லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.

கைது - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 1:41 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.

காரைக்குடி தெற்கு காவல் நிலைய சரகம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சூரிய பிரகாஷ் ( 27). இவா் மீது வழிப்பறி, கொலை முயற்சி, அடிதடி, காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலரை மிரட்டியது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது இவா் ஒரு வழக்கில் கைதாகி ராமநாதபுரம் சிறையில் இருந்தாா். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரையின் பேரில், சூரிய பிரகாஷை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டாா். இதன்பேரில், சூரியபிரகாஷ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.