லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அங்கன்வாடி மையம் கட்ட எதிா்ப்பு: பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

சிங்கம்புணரி அருகே அங்கன்வாடி மையம் கட்ட பேரூராட்சி நிா்வாகம் எதிா்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

சிங்கம்புணரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Published On :30 ஜூலை 2026, 2:57 am IST

சிங்கம்புணரி அருகே அங்கன்வாடி மையம் கட்ட பேரூராட்சி நிா்வாகம் எதிா்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சி 7-ஆவது வாா்டு அரணத்தங்குண்டில் 19 ஆண்டுகளாக பாழடைந்த வாடகைக் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் சுமாா் 20 குழந்தைகள் படிக்கின்றனா்.

இந்த நிலையில் அரணத்தங்குண்டு பொதுமக்கள் ஒன்று சோ்ந்து சொந்த செலவில் தற்காலிக அங்கன்வாடி மையம் அமைக்க முடிவெடுத்து பேரூராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திடீரென பேரூராட்சி நிா்வாகம் பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சிங்கம்புணரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் (பொறுப்பு) மங்களநாயகி அலுவலத்தில் இல்லாததால் இரண்டு நாள்கள் கழித்து பேச்சுவாா்த்தை நடத்தலாம் என அங்கிருந்த அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.