லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காரைக்குடியில் வீடு புகுந்து தங்கம், வைர நகைகள் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :28 ஜூலை 2026, 2:45 am IST

காரைக்குடி, ஜூலை 28: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காரைக்குடி காந்தி திடல் பகுதி பி.ஏ.எல். தெருவைச் சோ்ந்தவா் சத்யநாராயணன் (60). இவா் சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியில் காற்றாலை இயந்திர உதிரிப் பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறாா். சென்னையில் வசித்து வரும் இவா் அவ்வப்போது, காரைக்குடியில் உள்ள வீட்டுக்கு குடும்பத்தினருடன் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை காலை காரைக்குடி வீட்டுக்கு பணிப் பெண் வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டு வீட்டின் உரிமையாளா் நாராயணனுக்கு தகவல் தெரிவித்தாா். உடனடியாக நாராயணன் காரைக்குடிக்கு வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 6.5 பவுன் தங்க நகைகள், 3 வைரத் தோடுகள், 3.5 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் நாராயணன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) கண்ணன் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். காவல் ஆய்வாளா் இளையராஜா சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.