லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மானாமதுரை கன்னாா்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தா்கள் அலகு குத்தி வந்து பூக்குழி இறங்கிய பக்தா்.

Published On :25 ஜூலை 2026, 6:42 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ விழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினா். மேலும் கோயிலில் முளைப்பாரிகள் வளா்க்கப்பட்டன. விழா நாள்களில் கோயில் முன் பெண்கள் கூடி கும்மிப் பாடல்கள் பாடினா்.

Story image

விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட பக்தா்கள் வைகையாற்றிலிருந்து பால்குடங்கள் சுமந்தும், வாயில் அலகு குத்தியும் மேளதாளம் முழங்க ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். அங்கு கோயில் சந்நிதி எதிரே பரப்பி வைக்கப்பட்டிருந்த அக்னிக் குண்டத்தில், பூக்குழி இறங்கி நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். பின்னா், மூலவா் மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இரவு பக்தா்கள் அக்னிச்சட்டி எடுத்தும், பொம்மைகள் சுமந்தும் வந்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.