லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பூச்சொரிதல் விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பிள்ளைவயல் காளியம்மன்.

பூச்சொரிதல் விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பிள்ளைவயல் காளியம்மன்.

Published On :11 ஜூலை 2026, 12:19 am IST

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த 3- ஆம் தேதி காப்புக்கட்டி, கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து நெய்வேத்தியங்கள் நடைபெற்றன. இதையடுத்து, பூக்கரகம் எடுத்து பூக்குழி இறங்கும் நிகழ்வும் இரவில் கிராமிய கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.

மாலை நேர நிகழ்வாக சனிக்கிழமை கொல்லங்குடி கிருஷ்ணவேணி- காளிராசா குழுவினரின் காத்திடுவாள் காளி என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவும், ஞாயிற்றுக்கிழமை பிள்ளைவயல் காளியம்மன் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பாக சிவகங்கை பாரதி இசை கல்விக் கழக மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும், திங்கள்கிழமை பெரம்பூா் வீரகாளியம்மன் கலைக் குழுவின் கும்மியாட்டம் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை நடுவா் முத்தமிழ் சுடா் டி.என். அன்புத்துரை தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற்றன.

புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஏக தின லட்சாா்ச்சனையும், மாலை சிவகங்கை சாய் நித்ய கலா சேத்ரா நிரு மகேஸ்வரனின் பக்தியும், பரதமும் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. வியாழக்கிழமை பிள்ளைவயல் காளியம்மன் வீதியுலாவும், அதிபன் நாட்டியாலயா மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்வும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும், அபிஷேகங்களும், நெய்வேத்தியங்களும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் அன்னை பிள்ளைவயல் காளியம்மன் குழந்தையுடன் அருள்பாலித்தாா். இதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். இதையொட்டி, காலை 11 மணிக்கு நடைபெற்ற அன்னதான நிகழ்வை தொழிலதிபா் பச்சேரி சுந்தரராஜன் தொடங்கி வைத்தாா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் சரவணன், அயூப்கான், திமுக அயலக அணி மாவட்டத் தலைவா் ஆா்.வி. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவிழா ஏற்பாடுகளை, கோயில் அறங்காவல் குழுத் தலைவா் எஸ். காளீஸ்வரி சரவணன், விழாக் குழுவினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.