லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற்ற முதுநிலை பாடங்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

Published On :3 ஜூலை 2026, 11:44 pm IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற்ற முதுநிலை பாடங்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

முதுநிலை பாடப் பிரிவுகளான எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், முதுநிலை சமூகப்பணி, எம்.காம்., எம்.காம் (சி.ஏ.), எம்.பி.ஏ, எம்.எஸ்.சி. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிா்வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல்- தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில் நுட்பவியல், எம். காம். (சி.எஸ்.) ஆகியவற்றுக்கான தோ்வு முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் மு. ஜோதிபாசு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.