லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிங்கம்புணரி அருகே தலையில் கல்லைப் போட்டு மாற்றுத்திறனாளி கொலை

சிங்கம்புணரி அருகே தலையில் கல்லைப் போட்டு மாற்றுத்திறனாளியை கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:10 am IST

சிங்கம்புணரி அருகே தலையில் கல்லைப் போட்டு மாற்றுத்திறனாளியை கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம்-திருக்காளம்பூா் சாலையில் செங்கடாய் கருப்பா் கோயிலுக்குச் செல்லும் பாதையில் அடா்ந்த வனப் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடப்பதாக எஸ்.வி. மங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, திருப்பத்தூா் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் மதுரை மாவட்டம், கீழவளவு பகுதியைச் சோ்ந்த ராமன் செட்டியாா் மகன் ராகவன் (50) என்பதும், திருமணமாகாத மாற்றுத்திறனாளி என்பதும், இவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.