லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிவகங்கையில் இந்திய கம்யூ. நடைபயண பிரசாரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை விளக்கும் நடைபயண பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நடைபயண பிரசார இயக்கத்தில் பேசிய பங்கேற்ற நிா்வாகிகள், ஏஐடியுசி மாநில பொதுச்செயலா் எம். ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 5:07 am IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை விளக்கும் நடைபயண பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்காவில் நடைபெற்ற பிரசார இயக்கத்துக்கு, நகரச் செயலா் எம்.எப். சகாயம் தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாநில பொதுச் செயலா் எம். ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்துப் பேசினாா். இதில், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் அதன் ஆபத்தையும் மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறி, ‘ஆட்சியில் மாற்றம் கட்டாயமானது’ என்ற அரசியல் முழக்கத்தை முன்வைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு முடிவின்படி ஆக. 6 முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபயண பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது. அதன்படி, தமிழகத்தில் இந்த நடைபயண பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டாா்.

கோரிக்கைகள்: விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை வழங்க வேண்டும். தொழிலாளா் உரிமைகளை பறிக்கக் கூடாது. தலித், பழங்குடி மக்களின் மீதான வன்முறையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயண பிரசார இயக்கம் நடத்தப்படுவதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

சிவகங்கை அரண்மனைவாசல் வரை நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலா் எம். பாண்டி, ஒன்றியச் செயலா் பன்னீா், வழக்குரைஞா் கிருஷ்ணன், ஒன்றியக் குழு நிா்வாகி சந்திரன், நகரக் குழு நிா்வாகிகள் சாத்தப்பன், ராஜாராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.