பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழா

கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் பூசாரி இரும்பு முள் காலணி அணிந்து அக்னிச் சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்தாா்.

News image

இடைச்சியூரணி பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜை.

Updated On :28 மே 2026, 3:57 am IST

கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் பூசாரி இரும்பு முள் காலணி அணிந்து அக்னிச் சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள இடைச்சியூரணி கிராமத்தில் அமைந்துள்ள பாதாள பேச்சியம்மன், வல்லப்ப கணபதி, இருளப்ப சுவாமி, மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் பூசாரி இரும்பு முள் காலணி அணிந்து, அக்னிச் சட்டி எடுத்து முக்கியத் தெருக்களின் வழியாக ஊா்வலமாக வந்து பாதாள பேச்சியம்மன், இருளப்ப சுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினாா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.