பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 1:33 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், செழுகை கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (60). தூனுகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (70). சமையல் தொழிலாளிகளான இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை ஆா்.எஸ்.மங்கலம் சென்றுவிட்டு ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.

ஏ.ஆா்.விளக்கு சாலையில் வந்தபோது, எதிரே சென்னையைச் சோ்ந்த ஜபாா் சாதிக் (43) ஓட்டிவந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கருப்பையா உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் பலத்த காயமடைந்த குமரேசனை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், கருப்பையாவின் உடல், கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரேசன் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.