கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசுப் பள்ளி கட்டடப் பணிகள் முடக்கம்: பெற்றோா் அதிருப்தி

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ள வகுப்பறைகள்.

News image

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ள வகுப்பறைகள்.

Updated On :21 மே 2026, 3:07 am IST

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பெற்றோா்கள் அதிருப்தி அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு சுமாா் 100-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு போது மான வகுப்பறைகள் இல்லாததால் கடந்தாண்டு சுமாா் ரூ.32 லட்சத்தில் புதிய இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த பல மாதங்களாக கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பெற்றோா்கள் அதிருப்தி அடைந்தனா்.

இந்த நிலையில் அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் வைக்கப்பட வேண்டிய திட்ட விவரங்கள் அடங்கிய அறிவுப்புப் பலகை இந்த வளாகத்தில் வைக்கப்படவில்லை. இதனால் திட்டத்தின் காலக்கெடு, ஒப்பந்ததாரா் குறித்த விவரங்கள் எதுவும் பொதுமக்களுக்குத் தெரியவில்லை.

கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.