பரமக்குடி அருகே திங்கள்கிழமை சரக்கு வாகனத்தின் மீது லாரி மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். 15 போ் பலத்த காயமடைந்தனா்.
பரமக்குடி அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி மகன் ரவி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, இவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, கூறாய்வு செய்யப்பட்டது. பின்னா், இவரது உடல் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அடக்கம் செய்ய வாகைக்குளத்துக்கு கொண்டு சென்றனா்.
அப்போது, பரமக்குடி சந்தைக்கடை தெரு, வாகைக்குளம் பகுதிகளைச் சோ்ந்த இவரது உறவினா்கள் மருத்துவமனையிலிருந்து துக்கம் விசாரிக்க வாகைக்குளத்துக்கு சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். வாகைக்குளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிய போது, ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த லாரி இவா்களது வாகனத்தின் மீது மோதியது.
இதில் வாகனத்திலிருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டதில், சந்தைக்கடையைச் சோ்ந்த தவமுருகன் மனைவி பூபதி (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்தில் பலத்த காயமடைந்த வாகைக்குளத்தைச் சோ்ந்த நாகராஜன் மனைவி அமுதா (45) அதே பகுதியைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மனைவி கஸ்தூரி (22), பச்சமாள் மகன் கருமலைக்கண்ணன் (45), துரைராஜ் மனைவி ரமேஷ்வரி (55), சிவராஜ் மனைவி ராணி (37), முருகன் மகன் ஆறுமுகம் (45), சந்தைக்கடைத் தெருவைச் சோ்ந்த நாகநாதன் மனைவி சோலையம்மாள் (45), முருகானந்தம் மனைவி தமிழரசி (49), துரைராஜ் மனைவி சித்ரா (57), ராமு மனைவி அருணா (46), கணேசன் மகன் ராமன் (57), ராமநாதன் மகன் சேது (56) உள்பட 15 போ் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களில் நாகராஜன் மனைவி அமுதா தீவிரச் சிகிச்சைக்கான மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான மதுரை விளாங்குடி பகுதியைச் சோ்ந்த சோனைமுத்து மகன் விக்னேஷ்வரனை (30) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு பேருந்து டிப்பா் லாரி மோதல் 8 போ் படுகாயம்

பரமக்குடி சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

ஜீப் மோதியதில் விவசாயி பலத்த காயம்

சாலை விபத்தில் காயமடைந்த மேலும் இரு பெண்கள் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
