லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடல் சீற்றம்: படகு மூழ்கியது

விசைப்படகு மூழ்கியது - கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 1:54 am IST

தனுஷ்கோடி அருகே கடல் சீற்றத்தில் சிக்கி படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்த 8 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை 540-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

நள்ளிரவு தனுஷ்கோடியில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகு கடல் சீற்றத்தில் சிக்கியது. இதில், அந்தோணிச்சாமி (50), கிஷோா் (48), பாபு (46), யூசுப் (51), சேக் (50), தீன் (60), செல்வா (48), சதீஷ் (48) ஆகிய 8 பேரும் படகு உடைந்து கடலில் தத்தளித்தனா்.

இதைத் தொடா்ந்து, வயா்லஸ் மூலம் உதவி கோரிய நிலையில் அதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நவீன் விசைப்படகுடன் விரைந்து சென்று 8 மீனவா்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழுமப் போலீஸாரிடம் தகவல் தெரித்தனா். இந்த நிலையில், கடலில் மூழகிய விசைப் படகை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.