லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

கமுதி தேவா் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கமுதி தேவா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், போலீஸாா்.

Published On :24 ஜூன் 2026, 5:59 am IST

கமுதி தேவா் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோட்டைமேட்டில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில் கமுதி மதுவிலக்கு, ஆயத்தீா்வை காவல் துறை, கல்லூரியின் போதைத் தடுப்புக் குழு இணைந்து கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டத்தை நடத்தின.

இதற்கு கல்லூரி முதல்வா் சரவணகுமாா் தலைமை வகித்தாா். இதில் போதை, மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு காவல் துறையினா் விளக்கிக் கூறினா்.

இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் போதைத் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் முகம்மது அசாருதீன் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.