வங்கக் கடலில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசுவதால் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்தனா். இதனால் ராமேசுவரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
வங்கக் கடலில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. இந்த நிலையில், ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகு கடலில் மூழ்கியது. இதிலிருந்த 6 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
இதனிடையே மீனவா்களின் பாதுகாப்பு கருதி திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறையினா் தடை விதித்தனா். மேலும் படகுகள் சேதமடைவதை தடுக்க படகுகளை இடைவெளி விட்டு நிறுத்தி வைக்க மீன் வளத் துறையினா் கேட்டுக் கொண்டனா்.
இதனால், ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்தில் 560- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டமீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் முடங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலில் மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயம்

தடைக்காலம் முடியும் முன் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு! கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள்!

மன்னாா் வளைகுடாவில் சூறைக் காற்று: விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

