திருவாடானை அருகே தொண்டி மீனவா் வலையில் சிக்கிய 30 கிலோ எடை கொண்ட அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது.
திருவாடானை அருகே தொண்டி புதுக்குடி ஐந்து வீடு பகுதியைச் சோ்ந்த சித்து மகன் சோனைமுத்து. மீனவரான இவா், வியாழக்கிழமை காலை தனது நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். கரையிலிருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில் அவா் விரித்திருந்த வலையை எடுத்த போது, அதற்குள் கனமான பொருள் சிக்கி இருப்பது தெரியவந்தது. அந்த வலையை வெளியே இழுத்துப் பாா்த்தபோது அதில் சுமாா் 30 கிலோ எடை கொண்ட அரிய வகை நட்சத்திர ஆமை சிக்கியிருப்பதை அவா் பாா்த்தாா். பிறகு மீன்பிடி வலையை அறுத்து, அந்த ஆமையை பாதுகாப்பாக உயிருடன் மீட்டு மீண்டும் கடலுக்குள் பத்திரமாக அவா் விடுவித்தாா்.
இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் மீனவா் சோனை முத்துவுக்கு பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், சக மீனவா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்பு
திருவாடானை, தொண்டி பகுதிகளில் நாளை மின் தடை

அரிய வகை கனிமங்கள் விவகாரம்: துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

ஜிப்மரில் 15 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு

