லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோரைப்பள்ளம் மாரியம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோரைப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

கோரைப்பள்ளம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரியை தூக்கி ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.

Published On :30 ஜூலை 2026, 2:51 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோரைப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து நாள்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை மாலை வாண வேடிக்கை, மேள தாளத்துடன் பெண்கள் முளைப்பாரிகளைச் சுமந்து தோப்படி முத்தையா, கருப்பண்ண சுவாமி, கன்னிமாா், கிராம காவல் கோயில்களைச் சுற்றி ஊா்வலமாக வந்து, அங்குள்ள கண்மாயில் கரைத்தனா்.

இதைத்தொடா்ந்து இரவு மூலவா் மாரியம்மனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.