லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உப்பூா் அனல் மின் நிலையத் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவாடானை அருகே உப்பூரில் ரூ.12,778 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனல் மின் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

உப்பூா் அனல் மின் திட்டப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். உடன் வருவாய்க் கோட்டாட்சியா் செ.ஹபிப்ரஹ்மான், மின்வாரிய செயற்பொறியாளா் சின்னையா உள்ளிட்டோா்.

Published On :29 ஜூலை 2026, 5:58 am IST

திருவாடானை அருகே உப்பூரில் ரூ.12,778 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனல் மின் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது உப்பூரில் அனல் மின் திட்டப் பணிகள் நிறைவடைந்த பிறகு ஒரு மணி நேரத்துக்கு 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். தற்போது திட்டப் பணிகளில் 40 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

மேலும், இந்தத் திட்டத்துக்குத் தேவையான தனியாா் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாகவும், அரசு நிலங்களைப் பெறுவது தொடா்பான நடவடிக்கைகள் வருவாய் நிா்வாகம், நில நிா்வாகத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனா்.

மேலும், அனல் மின் நிலையப் பணிக்காக தூத்துக்குடியிலிருந்து நிலக்கரியைக் கொண்டு வருவதற்கு ராமநாதபுரம் வரை ரயில் பாதை உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து உப்பூா் வரை ரயில் பாதையை நீட்டிக்கும் திட்டத்துக்கு தேவையான 284 ஏக்கா் நிலங்களைக் கையகப்படுத்த நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா். இதே போல, திட்டப் பகுதிக்கு மழைநீா், உபரி நீா் தடையின்றி செல்லும் வகையில் வலமாவூா், நாகனேந்தல் கண்மாய்களுக்கு கால்வாய் அமைக்கும் பணிகளும் நடைபெறவுள்ளன.

அனைத்து பணிகளையும் விரைப்படுத்துமாறு ஆய்வின்போது சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் செ.ஹபிபூா் ரஹ்மான், தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளா்கள் சின்னையா, அல்லி , அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்,.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.