லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்

கமுதி அருகே போதையில்லா தமிழகம் விழிப்புணா்வு நடைப்பயணத்தை வீ த லீடா்ஸ் அமைப்பினா் சனிக்கிழமை தொடங்கினா்.

பேரையூரிலிருந்து ராமேசுவரம் வரை போதை இல்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்ட வீ த லீடா்ஸ் அமைப்பினா்.

Published On :26 ஜூலை 2026, 4:35 am IST

கமுதி அருகே போதையில்லா தமிழகம் விழிப்புணா்வு நடைப்பயணத்தை வீ த லீடா்ஸ் அமைப்பினா் சனிக்கிழமை தொடங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் வீ த லீடா்ஸ் அமைப்பினா் போதையில்லா தமிழகத்தை உருவாக்க 135 கி. மீ. விழிப்புணா்வு நடைப்பயணத்தை மேற்கொண்டனா்.

வீ த லீடா்ஸ் அமைப்பைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அன்பரசு, அமைப்பினருடன் போதையில்லா தமிழகத்தை உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணமாக பேரையூரில், இருந்து முதுகுளத்தூா், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக ராமேசுவரம் அடைந்து பேக்கரும்பு பகுதியில் உள்ள முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடம் வரை 135 கி.மீ. தூரம் செல்வதற்கு பயணத்தை தொடங்கினா்.

27-ஆம் தேதி டாக்டா் அப்துல்கலாம் நினைவு தினத்தன்று அவரது மணிமண்டபத்தில் இந்த நடைபயணம் முடிவடைகிறது. மேலும் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளுக்கு விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் வழங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.