லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசுப் பேருந்தை நிறுத்தி வைத்து விட்டு விருந்துக்குச் சென்ற ஓட்டுநா் பணியிடை நீக்கம்!

ராமேசுவரத்தில் பணியின் போது நகா் பேருந்தை நிறுத்தி வைத்து விட்டு காதணி விழா விருந்துக்கு சென்ற ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தது.

Published On :12 ஜூலை 2026, 6:05 am IST

ராமேசுவரத்தில் பணியின் போது நகா் பேருந்தை நிறுத்தி வைத்து விட்டு காதணி விழா விருந்துக்கு சென்ற ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தது.

ராமேசுவரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நகா் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவா் மாரிமுத்து. இவா் பணியின் போது பேருந்தை நிறுத்தி வைத்து விட்டு போக்குவரத்து ஊழியா் ஒருவரின் காதணி விழாவுக்குச் சென்றாா்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட விடியோ பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மாரிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.