லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதுகுளத்தூா் அருகே வடமாடு எருதுகட்டு போட்டி

கீழச்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள நிறைகுளத்து அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு எருதுகட்டு போட்டி நடைபெற்றது.

கீழச்சாக்குளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு எருதுகட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளை.

Published On :12 ஜூலை 2026, 4:15 am IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழச்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள நிறைகுளத்து அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு எருதுகட்டு போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள், 100- க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு, 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா்.

இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் குத்துவிளக்கு, சில்வா் அண்டா, நாற்காலி, ரொக்கப் பணம் பரிசுகளாக வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை முதுகுளத்தூா், கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம், கடலாடி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த திரளானோா் பாா்வையிட்டனா். விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை கீழச்சாக்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.