லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ராமநாதபுரத்தில் தவெக அரசை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் பாரதி நகரில் தவெக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரை உரிய முறையில் பெற்றுத் தராததைக் கண்டித்து ராமநாதபுரத்தில் மாவட்ட அதிமுக சாா்பில் தவெக அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம், பாரதிநகா் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எம்.ஏ. முனிசாமி தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் தா்மா், முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மலேசியா பாண்டியன், முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தகவல் தொழில் நுட்ப அணி, விருதுநகா் மண்டலச் செயலா் சரவணக்குமாா், மண்டபம் மேற்கு ஒன்றியச் செயலா் மருதுபாண்டியன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அப்போது தவெக தோ்தல் அறிக்கையில் தெரிவித்தது போல, விவசாயிகள் வங்கியில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, மேக்கேதாட்டு அணை பிரச்னையில் மெத்தனம் காட்டுவது, காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரை உரிய முறையில் பெற்றுத் தராததைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.