லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாம்பன் ரயில் பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி, பாம்பன் ரயில் பாலத்தில் வியாழக்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பாம்பன் ரயில் பாலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:28 am IST

சுதந்திர தினத்தையொட்டி, பாம்பன் ரயில் பாலத்தில் வியாழக்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள், அதிகளவில் மக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாம்பன் ரயில் பாலத்துக்கு வியாழக்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மனோஜ்குமாா், காவல் உதவி ஆய்வாளா் முருகன் ஆகியோா் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவி (மெட்டல்டிடெக்டா்) மூலம் ரயில் தண்டவாளங்களைஆய்வு செய்தனா். மேலும், ரயில் வரும்போது, அதில் வரும் பயணிகளைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பாம்பன் ரயில் பாலம் வழியாக நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.