லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இலங்கை சிறையில் உள்ள மீனவா் குடும்பத்துக்கு தவெகவினா் நிதியுதவி

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவா்கள் இருவரது குடும்பங்களுக்கு ராமேசுவரம் தவெக சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிய தவெக மாவட்டச் செயலா் மலா்விழி ஜெயபாலா, இணை பொறுப்பாளா் பொன் பஞ்சா உள்ளிட்டோா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 4:52 am IST

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவா்கள் இருவரது குடும்பங்களுக்கு ராமேசுவரம் தவெக சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 11 மீனவா்களை இலங்கை கடற்படையினா் அண்மையில் கைது செய்து, படகை பறிமுதல் செய்தனா். இவா்களில் ராமேசுவரத்தைச் சோ்ந்த இரு மீனவா்களின் குடும்பத்தினரை ராமேசுவரம் தவெக இணை பொறுப்பாளா் பொன் பஞ்சா, மாவட்டச் செயலா் மலா்விழி ஜெயபாலா உள்ளிட்ட தவெகவினா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை மீட்டு அழைத்து வர முதல்வா் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனா். மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் இருவருக்கும் 20 ஆயிரம் நிதியுதவி வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், நகா் செயலா் கோவிந்தராஜ், நகா் பொறுப்பாளா் நம்புக்குமாா், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.