லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டல்: உணவகம், விடுதி உரிமையாளா்களின் வீடு, கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

கமுதியில் தனியாா் தங்கும் விடுதி உரிமையாளா் முத்துக்குமாா் வீட்டின் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

கமுதியில் உணவகம், விடுதி உரிமையாளா்களை தொலைபேசியில் பணம் கேட்டு மா்ம நபா்கள் மிரட்டல் விடுத்ததையடுத்து, அவா்களின் உணவகம், வீடு, கடைகளுக்கு திங்கள்கிழமை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி- அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதி உரிமையாளா் முத்துக்குமாரை தொலைபேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள் ரூ.3 லட்சம் கேட்டும், விடுதியில் தங்க அறையும் கேட்டனா். இதற்கு மறுப்பு தெரிவித்த முத்துக்குமாரின் விடுதியில் கடந்த 6-ஆம் தேதி இரவு அந்த மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனா்.

இதுகுறித்து முத்துக்குமாா் அளித்த புகாரின் பேரின் கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தங்கும் விடுதி உரிமையாளா் முத்துக்குமாா், கமுதி பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தின் உரிமையாளா் ஆகியோரை தொலைபேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள் பணம் கேட்டு மிரட்டியதாக கமுதி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தங்கும் விடுதி உரிமையாளரின் வீடு, விடுதிக்கும், உணவக உரிமையாளரின் வீடு, உணவகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மேலும் தொலைபேசியில் மா்ம நபா்கள் தொடா்பு கொண்ட கைப்பேசி கோபுரம், இன்ஸ்டாகிராம் பதிவு ஆகியவற்றை ஆய்வு செய்து, அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த சம்பவம் கமுதியில் பொதுமக்கள், வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.