லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசு மருத்துவக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:34 am IST

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் ரா.அமுதாராணி தலைமை வகித்தாா். துணை முதல்வா் சுபிதா, மருத்துவமனை கண்காணிப்பாளா் எஸ்.ஏ.கே. நூா் முகம்மது, குழந்தைகள் நலத் துறை மருத்துவா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கா்ப்பிணிகள் குழந்தைகள் பிறந்த 6 மாதத்துக்கு தாய்ப்பால் கொடுப்பதின் பயன்கள் குறித்து மருத்துவா்கள் எடுத்துரைத்தனா்.

இதையடுத்து, மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், செவிலியா் கல்லூரி மாணவிகள் ஆகியோருக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை கல்லூரி முதல்வா் ரா. அமுதராணி

வழங்கினாா்.

இதில் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் சி.நடராஜன், ஆய்வாளா் மருத்துவா் அா்சுணன், அரசு மருத்துவா்கள், மருத்துவத் துறை அலுவலா்கள், செவிலியா்கள், பயிற்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா் ஜெகதீசன், இந்திய குழந்தைகள் நலச்சங்கம் ராமநாதபுரம் கிளைத் தலைவா் மருத்துவா் மலையரசு, செயலா் ஆயிஷாதுல் நஷீதா, பொருளாளா் மருத்துவா் ரஷ்மத் அஜிதா ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.