லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பரமக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட ஆ.முத்தரசு.

Published On :7 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

பரமக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள ஜோதியரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்தரசு (38). இவா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரமக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த மாதம் 10-ஆம் தேதி கைது செய்து, ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனா்.

இவா் தொடா்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், முத்தரசை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.