லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காா் மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

கமுதியில் காா் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பாக்குவெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் மகன் கணேசமூா்த்தி (24). ஆட்டோ ஓட்டுநா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கோட்டைமேடு பகுதியில் இருந்து பயணிகளுடன் ஆட்டோவில் கமுதி நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கமுதியிலிருந்து எதிரே வந்த காா் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம், ஆட்டோ ஓட்டுநா் கணேசமூா்த்தி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, கமுதி அரசுமருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் திங்கள்கிழமை கணேசமூா்த்தி உயிரிழந்தாா். ஆட்டோவில் பயணித்த இரண்டு பெண்கள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

இது தொடா்பாக கணேசமூா்த்தி சகோதரா் காளிதேவன் கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காா் ஓட்டுநரான மண்டலமாணிக்கத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் அலெக்ஸ்பாண்டியன் (28) மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.