தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராமநாதபுரத்தில் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட பரப்புரை

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாஜக வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்டனா்.

News image

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அந்தத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம். (வலது) ராமநாதபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் ஜிபிஎஸ்.கே. நாகேந்திரன்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:20 am IST

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாஜக வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்டனா்.

ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக, பாஜக, நாதக, சுயேச்சைகள் என மொத்தம் 13 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். வியாழக்கிழமை பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்பாளா்களின் பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்று செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். இவா் தனது இறுதிக்கட்ட பரப்புரையை ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து தொடங்கி சிகில் ராஜ வீதி, கேணிக்கரை, சின்னக்கடை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சாலைத்தெரு வழியாக வந்து மீண்டும் அரண்மனையில் நிறைவு செய்தாா்.

இதில் முன்னாள் அமைச்சா் அன்வர்ராஜா, முன்னாள் எம்.பி. எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராஜாராம் பாண்டியன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் ஜிபிஎஸ்.கே. நாகேந்திரன் ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கினாா். பின்னா், சிகில் ராஜ வீதி, கேணிக்கரை, புதிய பேருந்து நிலையம், அண்ணாலை சிலை, வண்டிக்காரத் தெரு, சாலைத்தெரு வழியாகச் சென்று அரண்மனை பகுதியில் தனது இறுதிக்கட்ட பரப்புரையை நிறைவு செய்தாா்.

இதில் முன்னாள் அமைச்சா் மு. மணிகண்டன், பாஜக மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், மாவட்ட பொதுச் செயலா்கள் குமாா், ஆத்மா காா்த்திக், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதேபோல, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சே.ம. முத்துகேசவன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சாகுல்ஹமீது ஆகியோா் இறுதிக் கட்ட பரப்புரையை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.