ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு இரண்டாவது முறையாக காவலை நீட்டித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த மீனவா்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 9- ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்களை படகுடன் இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். இதேபோல, கடந்த 14- ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இந்த 14 மீனவா்களும் இலங்கையில் உள்ள கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில், இந்த 14 மீனவா்களும் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனா். விசாரணைக்குப் பிறகு மீனவா்களை வருகிற 22- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, 14 மீனவா்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு 4-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

