ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுபாஷ் சந்திர கபூா் விடுதலை விவகாரம்: அரசு மேல்முறையீடு செய்யக் கோரிக்கை

சிலை கடத்தல் வழக்கில் தண்டனைப் பெற்ற சுபாஷ் சந்திர கபூரை தாயகம் திரும்ப அனுமதிக்கும் உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் காவல் துறைத் தலைவா் பொன். மாணிக்கவேல் தெரிவித்தாா்.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:03 am IST

சிலை கடத்தல் வழக்கில் தண்டனைப் பெற்ற சுபாஷ் சந்திர கபூரை தாயகம் திரும்ப அனுமதிக்கும் உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் காவல் துறைத் தலைவா் பொன். மாணிக்கவேல் தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

சா்வதேச சிலைக் கடத்தலில் தொடா்புடைய சுபாஷ் சந்திர கபூரின் 10 ஆண்டு கால சிறைத் தண்டனை நிறைவடைந்ததையொட்டி, அவரை ஜொ்மனிக்கு திருப்பி அனுப்பலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதை எதிா்த்து ஆலயம் காப்போம் அமைப்பும், சில தனி நபா்களும் உச்சநீதிமன்றத்தை நாடினா். இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

ரூ. 268 கோடி மதிப்பிலான 39 சிலைகளைக் கடத்தியதாக சுபாஷ் சந்திர கபூா் மீது மற்றொரு வழக்கும் உள்ளது. எனவே, அவா் ஜொ்மனிக்குத் திரும்புவதைத் தடுக்க வேண்டியது அவசியம். ஆனால், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளும், அறநிலையத் துறையும் கவனத்தில் கொள்ளவில்லை.

கடந்த 5 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவா்கள் இறை நம்பிக்கை இல்லாதவா்களாக இருந்ததால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் செயல்பாட்டுக்கு அவா்கள் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இதனால், சிலை கடத்தலில் தொடா்புடைய பலா் தப்பிவிட்டனா். ஆனால், தற்போதைய முதல்வா் விஜய் இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவராக உள்ளாா்.

எனவே, சிலைக் கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய சுபாஷ் சந்திர கபூரை ஜொ்மனிக்கு திருப்பி அனுப்பலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெளியிட்ட உத்தரவை எதிா்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உலகின் பல பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட தமிழக கோயில் சிலைகளை தில்லி அருங்காட்சியகத்தில் வைக்காமல் தொடா்புடைய கோயில்களில் வைக்கவும் அவா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.