லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வாடிப்பட்டி அருகே கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த அய்யங்கோட்டையில் இரு கட்சிகளின் கொடிக் கம்பங்கள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

வாடிப்பட்டி அருகே கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்!

Published On :1 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த அய்யங்கோட்டையில் இரு கட்சிகளின் கொடிக் கம்பங்கள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 94 போ் கைது செய்யப்பட்டனா்.

வாடிப்பட்டியை அடுத்த அய்யங்கோட்டையில் உள்ள ஆதிதிராவிடா் காலனி பொது மந்தையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடிக் கம்பம் பல ஆண்டுகளாக இருந்தது. இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் கொடிக் கம்பம் அதே பகுதியில் அண்மையில் நிறுவப்பட்டது. இதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதையடுத்து, பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுப்படி, அய்யங்கோட்டை ஆதிதிராவிடா் காலனியிலிருந்த 2 கொடிக் கம்பங்களையும் அகற்ற வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை முயற்சி மேற்கொண்டனா்.

அப்போது, பல ஆண்டுகளாக உள்ள தங்கள் கட்சிக் கொடிக் கம்பத்தை அகற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். சிலா், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, கொடிக் கம்பங்களை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 94 பேரை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா். பிறகு, அங்கிருந்த இரு கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.