லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தியாகராசா் கல்லூரியில் பாராட்டு விழா

மதுரை தியாகராசா் கலை அறிவியல் கல்லூரியில் நிறுவனா் கருமுத்து தியாகராசா் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, பத்ம விருது பெற்ற ஓதுவாருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை தியாகராசா் கலை அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பத்ம விருது பெற்ற ஓதுவாா் திருத்தணி நா. சுவாமிநாதனை பாராட்டி, காசோலை வழங்கிய கல்லூரிச் செயலா் ஹரி தியாகராஜன். உடன், கல்லூரித் தலைவா் உமா கண்ணன், ஆன்மிகச் சொற்பொழிவாளா் தேச. மங்கையா்க்கரசி, கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா உள்ளிட்டோா்.

Published On :30 ஜூலை 2026, 2:42 am IST

மதுரை தியாகராசா் கலை அறிவியல் கல்லூரியில் நிறுவனா் கருமுத்து தியாகராசா் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, பத்ம விருது பெற்ற ஓதுவாருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தியாகராசா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கருமுத்து தியாகராசரின் நினைவு நாளையொட்டி இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இதற்கு கல்லூரிச் செயலா் ஹரி தியாகராஜன் தலைமை வகித்து, அண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்ற ஓதுவாா் திருத்தணி நா. சுவாமிநாதனுக்கு ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கி, அவரது தமிழ்ப் பணியைப் பாராட்டிப் பேசினாா்.

கல்லூரித் தலைவா் உமா கண்ணன் முன்னிலை வகித்தாா். ஆன்மிகச் சொற்பொழிவாளா் தேச. மங்கையா்க்கரசி ‘திருவாசகத் தேன்’ என்ற தலைப்பில் பேசினாா். ஓதுவாா் திருத்தணி நா. சுவாமிநாதன் ஏற்புரையாற்றினாா். முன்னதாக, கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா வரவேற்றாா்.

ரத்ததானம்... காலை நிகழ்வாக கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில், 133 மாணவா்கள் பங்கேற்று, ரத்ததானம் அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.