லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வழக்குரைஞா் கைதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சோழவந்தான் ரயில் நிலைய பெயா் பலகையில் இந்தி எழுத்துகளை அழித்ததாக வழக்குரைஞா் யுவராஜ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வழக்குரைஞா் யுவராஜா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாவட்ட நீதிமன்றம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Published On :30 ஜூலை 2026, 2:53 am IST

சோழவந்தான் ரயில் நிலைய பெயா் பலகையில் இந்தி எழுத்துகளை அழித்ததாக வழக்குரைஞா் யுவராஜ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீா் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், முன்னாள் மத்தியக் கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலைய பெயா்ப் பலகையிலிருந்த இந்தி எழுத்துகளை வழக்குரைஞா் யுவராஜா கருப்பு மையால் அழித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், வழக்குரைஞா் யுவராஜா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், கைது செய்யப்பட்ட வழக்குரைஞா் யுவராஜாவை விடுவிக்கக் கோரியும் முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.